கல்லத்திக்கிணறு - மலைப்பட்டி இளவேளங்கால் வரை புதிய தார் சாலை அமைக்கும் பணி - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா துவக்கி வைத்தார்.
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கல்லத்திக்கிணறு -மலைப்பட்டி - இளவேளங்கால் கிராமம் வரை 4 கிலோ மீட்டர் வரை நெடுஞ்சாலைத்துறை கிராம சாலைகள் சிறப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 94 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணிபுரியும் மக்களை சந்தித்து கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து குறைகளை எம்எல்ஏ சண்முகையா யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்ச்சியில்நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சுரேஷ் குமார் உதவி பொறியாளர் திலிப்குமார் மலைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் இக்பால் என்ற சின்ன மாரியப்பன் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் இளைஞரணி சூர்யா மகளிரணி பாக்கியலட்சுமி செல்லத்தாய் மலைப்பட்டி கிளை செயலாளர்கள் கணேசன் பெருமாள் அரசு ஒப்பந்ததாரர் பீர்முகம்மது மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.