தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் ரூ,515.72கோடியில் ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் திட்டபணி எம்பி கனிமொழி அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி யூனியன் மாப்பிள்ளையூரணி ஊராட்சி ராமதாஸ் நகரில் ரூ,515.72கோடி ஜல்ஜீவன் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணகுமார் தலைமை வகித்தார், விழாவில் திமுக துணை பொதுச்செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து சிறப்புரையாற்றி பேசினர்.
அதனை தொடர்ந்து ரூ 515.72 கோடி மதிப்பிலான ஜல் ஜீவன் மிஷன் கூட்டு குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கலை நாட்டி கனிமொழி எம்.பி. சிறப்புரையாற்றி பேசினார்.
விழாவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் மாறிய அதிகாரிகள்கலந்து கொண்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து விளக்கி பேசினர் இந்தத் திட்டத்தின் மூலம் 363 கிராமங்களுக்கு ஒரு லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் 42 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் 60 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படுகிறது ஒர் ஆண்டுக்குள் பணிகளை விரைவாக முடிக்க திட்டமிட்ப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த விழாவில் மாநில திமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர்தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் தூத்துக்குடி யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி,வசந்தா,மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர்,மற்றும் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.