ஜே சி ஐ தூத்துக்குடி ஹெர்குலேனியம் ஏலைட் சார்பில் நம்ம தூத்துக்குடி மாரத்தான் போட்டி!.

ஜே சி ஐ தூத்துக்குடி ஹெர்குலேனியம் ஏலைட் சார்பில் நம்ம தூத்துக்குடி மாரத்தான் போட்டி!.

ஜே சி ஐ தூத்துக்குடி ஹெர்குலேனியம் ஏலைட் சார்பில் போதைப் பொருள் எனக்கு வேண்டாம் நமக்கும் வேண்டாம் நம்ம தூத்துக்குடி மாரத்தான் போட்டி ஏப்ரல் 30 ம் தேதி தருவை மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியை துவக்கி வைப்பதற்கு சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைக்கிறார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இது சம்பந்தமாக தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த  தூத்துக்குடி ஹெர்குலோனியம் ஏலைட் தலைவர் பிரேம்பால், செயலாளர் உமா மகேஸ்வரன், திட்டத்தலைவர் அருணாச்சலம், முன்னாள் தலைவர் தனுஷ் மதன், துணைத் தலைவர் யோகேஷ்சி ன்னமணி,ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

வருகின்ற ஏப்ரல் 30 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து போதைப்பொருள் எனக்கு வேண்டாம் நமக்கு வேண்டாம் என்ற விழிப்புணர்வு மாறாத போட்டி நடக்க உள்ளது அதில் 21 கிலோமீட்டர் ஆண் பெண் பொதுவாகவும், மற்றும் 10 கிலோ மீட்டர் ஆண் பெண் தனித்தனியாகவும்,5 கிலோமீட்டர் வாக்கத்தான் பொதுவாகவும் நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.

இந்தப் போட்டியில் 21 கிலோமீட்டர் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக ரூபாய் 25000, இரண்டாவது பரிசாக 15,000 மூன்றாவது பரிசாக 10,000 வழங்கப்படும். மேலும் 10 கிலோ மீட்டர் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக 15,000 இரண்டாவது பரிசாக 10,000 மூன்றாவது பரிசாக 5000 வழங்கப்பட இருக்கிறது.

மேலும் இந்த போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் பதக்கம்,சான்றிதழ், கிட் பேக், மற்றும் டீ சர்ட், கூல்டிங், 25 இடங்களில் தண்ணீர் வசதி அனைத்தும் செய்து தரப்பட உள்ளது எனவும் 

மேலும் இந்த போட்டிக்கான ஸ்பான்ஸர்கள் டி எம் பி பேங்க், திலீபன் டிரான்ஸ்போர்ட், அழகர் ஜுவல்லரி,சின்னத்துரை அன் கோ,ஆல்வின் பில்டர்ஸ்,வொய்யால பீட்சா, ஆகியோர் செய்துள்ளனர் என்று செய்தியாளரிடம் தெரிவித்தனர் .