ஸ்ரீவையில் ஜெ.பிறந்தநாள் விழா; ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் நலத்திட்ட உதவி வழங்கி அசத்தல்!.

ஸ்ரீவையில் ஜெ.பிறந்தநாள் விழா; ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் நலத்திட்ட உதவி வழங்கி அசத்தல்!.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஓ.பி.எஸ் அணி அதிமுகவினர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின்  75 வது பிறந்தநாள் விழாவை அசத்தலாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு ஸ்ரீவை ஒன்றிய செயலாளர் நல்லக்கண்ணு தலைமையில் ஓ.பி.எஸ் அணி தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் உடன்குடி ஜெகதீசன், ஆழ்வை கிழக்கு குமார் என்ற பெருமாள், ஸ்ரீவை நகர அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி பார்வதி, சுடலைவேணிசுந்தரி, நிர்வாகிகள் டேனியல் துரைப்பாண்டி, கணேசன், தொகுதி செயலாளர் செல்லையா, நகர துணை செயலாளர் சுடலைமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.