அதிமுகவில் மட்டும் தான் கீழே உட்காந்திருப்பவர்களும் தொண்டர்களும் எம்.பி, எம்.எல்.ஏவாக அமைச்சராக பதவிக்கு வரமுடியும்.அப்படியல்ல திமுகவில் ஒரு சிலருக்கு மட்டும் தான் மரியாதை சிவசாமி வேலுமணி தாக்கு...

அதிமுகவில் மட்டும் தான் கீழே உட்காந்திருப்பவர்களும் தொண்டர்களும் எம்.பி, எம்.எல்.ஏவாக அமைச்சராக பதவிக்கு வரமுடியும்.அப்படியல்ல திமுகவில் ஒரு சிலருக்கு மட்டும் தான் மரியாதை சிவசாமி வேலுமணி தாக்கு...

தூத்துக்குடி நாடாளுமன்ற தோ்தலில் தொகுதியில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதாித்து பல்ேவறு கட்டப் பிரச்சாரங்கள் நடைபெற்றுள்ள நிலையில் தேவர்புரம் சாலையில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தலைமை தேர்தல் காாியலாயம் திறப்பு விழாவிற்கு தெற்கு மாவட்டசெயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்தார் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், தோ்தல் காாியாலயத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி கூட்டணி கட்சி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் சிவசாமி வேலுமணி பேசுகையில், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் எதிர்கட்சி தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அதிமுகவை வழிநடத்தி வருகிறாா். அதிமுகவில் மட்டும் தான் கீழே உட்காந்திருப்பவர்களும் தொண்டர்களும் எம்.பி, எம்.எல்.ஏவாக அமைச்சராக பதவிக்கு வரமுடியும். திமுகவில் ஒரு குறிப்பிட்ட சில பேரை தவிர மற்றவர்கள் யாரும் விருப்பமனு கூட வாங்க முடியாது. அப்படித்தான் எல்லோரையும் அடிமையாக வைத்துள்ளனர். இப்போதும் மக்களையும் அடிமையாக வைக்க பார்ப்பது மட்டுமின்றி குடும்ப அரசியல் செய்கின்றனர். மக்கள் பணி என்பது எல்லோருக்கும் நன்மை செய்வதும் நன்மை கிடைப்பது தான். திமுக ஆட்சியில் யாருடைய வாழ்வாதாரம் உயரவில்லை. முன்னேறவும் இல்லை கடந்த இரண்டு தேர்தலின் போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்ற வில்லை. சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, கொடுத்த 9 ஆயிரம் கோடி பணத்தை வைத்து மக்களை விலைபேசி வாங்கிவிடலாம். என என்னுகிறார்கள். அது நடக்காது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் காலடியில் கிடந்து பதவி சுகத்தை அனுபவித்து விட்டு இன்று அதிமுக டெபாசிட் வாங்க கூடாது என்று பேசி வருகிறார். அவர் உடம்பில் ஓடூகின்ற இரத்தம் உடுக்கின்ற உடை அனைத்துக்கும் வாழ்வாதாரம் கொடுத்தது அதிமுக என்பதை மறந்திட வேண்டாம். எந்த கட்சிக்குமே அவர் விசுவாசமாக இருக்க மாட்டார். அவருக்கு தேவை சுகமான வாழ்க்கை பணம் இது தான் முக்கியம் என்று செயல்படுபவர் நான் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எல்லா தரப்பினாின் சூழ்நிலைகளையும் தொிந்தவன். ஆகவே உங்களுடைய இல்ல நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும், நான் உங்களை தேடி வருவேன். நீங்கள் அவர்களை தேடி செல்லமுடியாது.

அமைச்சர் கீதாஜீவனும், மேயர் ஜெகன் பொியசாமியும் மக்களுக்கான பணிகளை முறையாக செய்யவில்லை. குடிநீர் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த அரசு தேவையில்லை ஆகவே எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசுகையில், பிரதமர் மோடி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இரண்டு முதலமைச்சர்களை கைது செய்துள்ளார். தமிழகத்தில் அதே போல் அமைச்சர்களை கைது செய்துள்ளார். இதே வழியை பின்பற்றி எடப்பாடியையும் மிரட்டி பார்த்தார். அதற்கு அடிபணியாமல் பிஜேபி தயவு தேவையில்லை என்று சொல்லி, கடந்த காலத்தில் ஜெயலலிதா இருந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலின்போது லேடியா மோடியா பார்த்துவிடுவோம் என்று கூறி செயல்பட்ட வழியில் இன்று எடப்பாடி பணியாற்றுகிறாா். வாஜ்பாய் பிரதமராக இருந்து போது டெல்லிக்கு சென்று ஜெயலலிதா ஓரு ஓட்டு மூலம் அந்தஆட்சியேயை வீழ்த்தியவர் இது எல்லாம் வரலாறு இரண்டரை கோடி தொண்டர்களை கொண்ட அதிமுகவை கண்டு தமிழக முதலமைச்சர் நடுங்கி போய் உள்ளாா். அனைவரும் ஓற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் வெற்றி நமக்கு தான் என்று பேசினார்.

நிகழ்வில் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்

மாவட்ட அவைத்தலைவர் திருபாற்கடல், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் டைகர்சிவா, உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்