அதிமுகவில் இரட்டை தலைமை தான்.2022 ஜூலை 11 ல் நடந்த பொதுக்குழுவை ஏற்கவில்லை தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தாக்கல் செய்த மனு மீது நாளை விசாரணை நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணையம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் வேட்புமனுவில் தாம் கையெழுத்திடுவதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை ; ஆகையால் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரித்து அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று இபிஎஸ் , உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதிமுகவின் பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது . இதனால் இந்த வழக்கில் இபிஎஸ் , அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் அங்கீகாரம் கோரியும் இரட்டை இலை சின்னம் கோரியும் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் , இது விசித்திரமான வழக்கு . இடையீட்டு மனு மீது பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கும் அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தது.
அத்துடன் இபிஎஸ் - ன் இடைக்கால மனு மீது தேர்தல் ஆணையமும் , ஓபிஎஸ் தரப்பும் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் ஓபிஎஸ் தரப்பு , உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்தது . அதில்,அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை. அப்படி இருக்கும் போது அதிமுகவின் பிரதிநிதி என இபிஎஸ் உரிமை கோர முடியாது . இது அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் குறுக்கிடும் நடவடிக்கை என குறிப்பிட்டிருந்தார் .இதேபோல் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையமும் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது . அதில் , அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது.
2022 ம் ஆண்டு ஜூலை 11 அதிமுக இபிஎஸ் அணி நடத்திய பொதுக்குழு தீர்மான விவரங்களை இன்னமும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை . இதனால் அதிமுகவில் இரட்டை தலைமைதான் தற்போதுவரை நீடிக்கிறது . மேலும் 2022 - ம் ஆண்டு ஜூலை 11 - ல் அதிமுக இபிஎஸ் அணி கூட்டிய பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தொரடப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதமும் கேள்விக்குறியதாகும் . ஆகையால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க கோரும் எடப்பாடி பழனிசாமி மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் .அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்குதான் நிலுவையில் உள்ளது . ஆனால் இரட்டை இலை சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை . ஈரோடு கிழக்கு தொகுதி வேட்புமனுத் தாக்கலின் போது இரட்டை இலை சின்னம் கேட்கப்பட்டால் அது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிதான் முடிவு செய்வார் . இரட்டை இலை சின்னம் குறித்த பிரச்சனையை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு யாரும் கொண்டு வரவும் இல்லை . ஒவ்வொரு கட்சியின் உட்கட்சி தேர்தல்களை எல்லாம் தேர்தல் ஆணையம் கண்காணித்துக் கொண்டிருக்கவும் முடியாது . இது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை . அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
இபிஎஸ் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது . இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் மனு , எடப்பாடி பழனிசாமிக்கு மிகப் பெரிய பின்னடைவாகும்.
அதிமுக பொதுக்குழு வழக்கு எடப்பாடி மனு 3 நாள் டைம் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணை.