பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம் மாப்பிள்ளையூரணியில் நடைபெற்றது!.
பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேல அலங்காரத்தட்டு பாண்டியாபுரம் பகுதிகளில் நடைபெற்றது.
இந்த விழா தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வி தலைமையில் பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சக்தி முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் பெண்களுக்கு எதுவும் பிரச்சினை என்றால் என்னை எப்போதும் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் உங்களுடன் ஒரு சகோதரனாக உடன் இருப்பேன் என்று கூறினார்.
இந்த விழாவில் பெண்கள் கும்மி அடித்தும் சிறுமிகள் பரதநாட்டியம் ஆடியும் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பெண்களும் அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பெண்கள் காவல் நிலையங்களுக்கு செல்லும் பொழுது எந்த வித அச்சமும் இன்றி துணிச்சலாக செயல்பட வேண்டும் எனவும் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் அரசியலில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த விழாவில் பெண்கள் இணைப்பு குழு மாநில செயலாளர் பொன்னுத்தாய்,மேல அலங்காரத்தட்டு ஊர் தலைவர் கிருஷ்ணன், வழக்கறிஞர் மாடசாமி,ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், பெண்கள் இணைப்பு குழு (கோவில்பட்டி)ஒருங்கிணைப்பாளர் மேரி ஷிலா, மேல அலங்காரத்தட்டு பெண்கள் இணைப்பு குழு சந்தணம், மாப்பிள்ளையூரணி வார்டு உறுப்பினர் பாரதிராஜா, ஆழ்வார்குறிச்சி பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுலோச்சனா, களக்காடு பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி,மேல அலங்காரத் தட்டு கவிதை பெண்கள் இணைப்பு குழு அனுசியா, கீழ அலங்காரத்தட்டு பாடல் குழுவினர் பெண்கள் இணைப்பு குழு ரோஸ்லின் அமுதா, மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மகளிர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மேல அலங்காரத்தட்டு பெண்கள் இணைப்பு குழு அந்தோணியம்மாள் நன்றி உரையாற்றினார்.