புதுமைப்பெண் திட்ட விரிவாக்க விழா - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதுமைப்பெண் திட்ட விரிவாக்க விழா - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்ற மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 10 மாணவிகளுக்கு பற்றட்டைகளை (Debit Card) வழங்கினார்.  

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எம் சி. சண்முகய்யா,மார்க்கண்டேயன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் தஜெயஸ்ரீ முரளீதரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் சுலந்து கொண்டனர்.