திருசசசதூர் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கக் கோரி கருப்புக் கொடிகட்டி மீனவாகள் காலவரையரையற்ற போராட்டம்.

திருசசசதூர் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கக் கோரி கருப்புக் கொடிகட்டி மீனவாகள் காலவரையரையற்ற போராட்டம்.

திருச்செந்தூர் அமலிநகர் மீவை கிராமத்தில் தூண்டில் பாலம் அமைக்கக்கோரி மீனவ கிராம மக்கள் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செந்தூர் அருகேயுள்ள மீவை கிராமங்களாகிய வீர பாண்டியன்பட்டிணம், மணப்பாடு போன்ற கடற்கரை கிராமங்களில் தூண்டில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமலிநகர் மீனவ கிராமத்திலும் தூண்டில் பாலம் அமைக்க வேண்டுமென மீவை மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனை அரசு ஏற்று சட்டசபையில் நடைபெற்ற மானியக் கோரிக்கையில் ரூ 83 கோடி செலவில் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை தூண்டில் பாலம் அமைக்க எந்தவித பணியும் நடைபெறவில்லை.மீனவ மக்கள் இதுகுறித்து அரசு அதிகாரிகள், தொகுதி அமைச்சர், தொகுதி எம்.பி ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இதுவரை எந்த பணியும் நடைபெறததால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் காலவரையரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

முதல்நாளில் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளில் கருப்புக் கொடிகட்டி கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூண்டில் பாலம் பணி நடைபெறும்வரை போராட்டம் நடத்தப்போவதாக மீனவர் ஊர்நலக்கமிட்டி மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.