தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக ரூபாய் 29 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு பெற்ற பணிகளுக்கான திறப்பு விழா - அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு.

தூத்துக்குடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, தலைமைச் செயலகத்தில் 12.08.2024 இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.29.74 கோடி செலவிலான நகர மாநாட்டு மையம், சிதம்பரம் நகர் வணிக வளாகம், ஸ்டேட் பேங்க் காலனி, மடத்தூர், கணேஷ் நகர் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டிடங்கள் மற்றும் எழில் நகர், முத்தம்மாள் காலனி, டிஎம்பி காலனி பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான துணை மைய கட்டிடங்கள் உட்பட 8 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநாட்டு வணிக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, கிழக்கு மண்டல உதவி ஆணையர் சொர்ணலதா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், திமுக பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், மாமன்ற உறுப்பினர்கள் ராமு அம்மாள், கீதா முருகேசன், இசக்கி ராஜா, கந்தசாமி, கனகராஜ், வைதேகி, முத்துவேல் , தனலட்சுமி, விஜயலட்சுமி, சரவணகுமார், கண்ணன், ரெங்கசாமி, ஜெயசீலி, மரிய கீதா, சரண்யா, சுப்புலட்சுமி, பவானி மார்ஷல், செபஸ்டின் சுதா, ரெக்ஸ்லின், சந்திரபோஸ், கற்பகக்கனி, மும்தாஜ், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார்,
வட்ட செயலாளர்கள் கருப்பசாமி, கங்கா ராஜேஷ், செல்வராஜ், திமுக சார்பு அணி அமைப்பாளர்கள் மருத்துவர் அணி அருண் குமார், மகளிர் அணி கவிதா தேவி, ஐடி விங் பிரபு, அண்ணாதுரை மற்றும் ஜோஸ்பர் உட்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.