கந்தசாமிபுரம் கிராமத்தில் ரூ 15.5 லட்சம் மதிப்பீட்டில் முடிவடைந்த பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா - சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கந்தசாமிபுரம் கிராமத்தில் ரூ 15.5 லட்சம் மதிப்பீட்டில் முடிவடைந்த பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா - சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மேலபாண்டியபுரம் ஊராட்சி கந்தசாமிபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலக கட்டிடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமையல் கூடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இமாம் மின்வாரிய உதவி பொறியாளர் மணிசேகர் மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி TNSTC தொமுச இளங்கோ சரவணன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார் ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் கிளை செயலாளர்கள் ராஜேந்திரன் அரியநாயகம் சுரேஷ் ராமகிருஷ்ணன் இளங்கோ முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.