ராமச்சந்திராபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா திறந்து வைத்தார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குமாரகிரி ஊராட்சி ராமச்சந்திராபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைக்கோட்ராஜா பானு உதவி பொறியாளர் ரவி பணி மேற்பார்வையாளர் முத்துராமன் வருவாய் ஆய்வாளர் செல்வலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் பேச்சியம்மாள் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி அவைத்தலைவர் பாலசுந்தரம் ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி ஒன்றிய கழக துணை செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் பொன்னரசு மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ராஜாஸ்டாலின் வழக்கறிஞர் அணி மகேந்திரன் மாவட்ட துணை அமைப்பாளர் சைமன் ஊராட்சி மன்ற தலைவர் ஜாக்சன் துரைமணி கிளை செயலாளர்கள் சுப்பிரமணியன் சஞ்சய்குமார் சக்திவேல்,நெடுஞ்செழியன் செல்வம் முப்பிலியன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.