வடக்கு சிலுக்கன்பட்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா திறந்து வைத்தார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வடக்கு சிலுக்கன்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைக்கோட் மகாராஜா மின்வாரிய உதவி பொறியாளர் சண்முகத்தாய் வருவாய் ஆய்வாளர் அன்பழகன் தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழக துணைச் செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன் வடக்கு சிலுக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாரிச்செல்வன் மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் மரிய பொன்னம்மாள் மேல தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ்வரி முத்துமாரியப்பன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிச்சைக்கனி ஊராட்சி செயலர் ஜெயரத்தினம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் ஞானசேகரன் இசக்கியம்மாள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.