புதிய கலையரங்கம் திறப்பு விழா - சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி தெற்கு ஆவரங்காடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தைஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களை சந்தித்து எம் சி.சண்முகையா எம்எல்ஏ குறைகளை கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ்,யூனியன் ஆணையாளர் சசிகுமார்,பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன்,மின்வாரிய உதவி பொறியாளர் மணிசேகர்,வருவாய் ஆய்வாளர் ஶ்ரீரங்க பெருமாள்,கிராம நிர்வாக அலுவலர் செல்வகணேஷ்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார்,லதா கருணாநிதி,தேன்மொழி சுடலைமணி,ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன்,ஊராட்சி செயலர் செல்வி, தெற்கு ஆவரங்காடு கிருஷ்ணசாமி,அரசு ஒப்பந்ததாரர்கள் முஹம்மது, கருப்பசாமி,மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.