போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா - அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று (27.02.2025) காலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 15 கோடியே 81 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சிறப்புரையாற்றி முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மருத்துவ கல்லூரி முதல்வர் சிவக்குமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன்,சரவணகுமார், பொன்னப்பன், இசக்கி ராஜா, கந்தசாமி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.