முறம்பன் கிராமத்தில் புதிய ஊராட்சி செயலாக்க கட்டிடம் புதிய நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா - எம் சி.சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் முறம்பன் கிராமத்தில்42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி செயலாக்க கட்டிடம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தரைதள நீர்த்தேக்கத் தொட்டியையும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி. சண்முகையா திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாக்க கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் மாவட்ட துணை சேர்மன் மகாலட்சுமி சந்திரசேகர் உதவி பொறியாளர் பால நமச்சிவாயம் வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் கிராம நிர்வாக அலுவலர் அழகுமலை மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி ஊராட்சி மன்ற தலைவர்கள் தேன்மொழி சுடலைமணி அருண்குமார் வேலாயுதசாமி கிருஷ்ணவேணி ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி கிளை செயலாளர்கள் சேதுராமன் முருகன் இளங்கோ ஜோசப் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.