ஓணமாக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கூடுதல் வகுப்பறை திறப்பு விழா - எம் சி.சண்முகையா எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஓணமாக்குளம் ஊராட்சி ஓணமாக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மனிதநேய உட்கட்டமைப்பு திட்டத்தில் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் இரண்டு வகுப்பறைகள் கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் யூனியன் ஆணையாளர் சசிகுமார் உதவி பொறியாளர் பாலநமச்சிவாயம் வட்டார கல்வி அலுவலர் பவனந்தீஸ்வரன் வருவாய் ஆய்வாளர் துரைசாமி கிராம நிர்வாக அலுவலர் நெல்லையப்பன் பள்ளி தலைமை ஆசிரியர் முருகரத்தினம் ஊராட்சி மன்ற தலைவர்கள் பெருமாள் அருண்குமார் துணை தலைவர் ரத்தினபாண்டி ஊராட்சி செயலர் ராமர் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுப்புலட்சுமி மகாராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.