தமிழ்நாடு முதல்வர் துவக்கி வைத்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் துவக்க விழா; மேலகூட்டுடன்காடு கிராம மக்கள் அகன்ற திரையில் நேரலையில் கண்டு மகிழ்ச்சி!

தமிழ்நாடு முதல்வர் துவக்கி வைத்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் துவக்க விழா; மேலகூட்டுடன்காடு கிராம மக்கள் அகன்ற திரையில் நேரலையில் கண்டு மகிழ்ச்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் துவக்கி வைத்த மகளிர் உரிமைத் திட்ட விழாவினை தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில், மேலகூட்டுடன்காடு கிராம மக்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அகன்ற திரையில் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாட்டில் 1 கோடியே 06 இலட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட துவக்க விழா இன்று நடைபெற்றது. 

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்த்தை தொடங்கிவைத்தார். இந்த விழாவினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம மக்களும் கண்டு களிக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூட்டுடன்காடு ஊராட்சி பகுதியான மேலகூட்டுடன்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் அகன்ற எல்இடி திரையில் பொதுமக்கள், காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மகளிர் உரிமைத்திட்ட விழாவினை நேரலையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட கிராம மக்கள் பொது மக்கள் கலந்து கொண்டு திரையில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஹெலன் பொன்மணி, திமுக தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அம்பாசங்கர், ஊராட்சி ஒன்றிய காசாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.