இளவேலங்கால் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டிடம் திறப்பு விழா - சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் இளவேலங்கால் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 6 லட்சம்_ மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இளவேலங்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி முருகேசன் ஊராட்சி செயலர் ராஜு ஒன்றிய கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் சிவக்குமார் இளவேலங்கால் கிளைக் கழக செயலாளர்கள் ரமேஷ் மகாராஜன் என்ற பொன்னுசாமி ஊர் நாட்டாமைகள் முருகன் நாராயணசாமி மகாராஜா கருப்பசாமி ராஜகனி மகளிரணி கனகா தசுமதி பழனியம்மாள் சுசிலா மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.