வழக்கறிஞர் முத்துகுமார் கொலை வழக்கில் மேலும் 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த வழக்கறிஞர் முத்துகுமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகள் மீது ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட நிலையில் மேலும் 3 நபர்கள் மீது இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்து கைது செய்து நடவடிக்கை..
கடந்த 22.02.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோரீஸ்புரம் பகுதியில் சோரீஸ்புரம், அய்யனடைப்பு பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான பச்சைக்கண்ணன் மகன் முத்துகுமார் (47) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் தென்காசி மாவட்டம் கீழ கடையம் பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் ராஜரத்தினம் (29), தூத்துக்குடி ஆறுமுகநேரி கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்த சிங்கராஜ் (எ) சிங்கராஜா மகன் வேல்முருகன் (29), திருவள்ளுர் மாவட்டம் கம்மவார் பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் மகன் இலங்கேஸ்வரன் (29), தூத்துக்குடி புதுக்கோட்டை, கூட்டாம்புளி பகுதியை சேர்ந்த வெள்ளதுரை மகன் நமோ நாராயணன் (33), ஆறுமுகநேரி ராஜமணியபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகன் முத்துராஜ் (23), ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்த பெருமாள் மகன் பாஸ்கர் (29) உட்பட இதுவரை 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் ராஜரத்தினம், வேல்முருகன் மற்றும் இலங்கேஸ்வரன் ஆகியோர் கடந்த 25.03.2023 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிலையில், மேலும் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்கள் நமோ நாராயணன், முத்துராஜ் மற்றும் பாஸ்கர் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்தார்.
அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தூத்துக்குடி புதுக்கோட்டை, கூட்டாம்புளி பகுதியை சேர்ந்த வெள்ளதுரை மகன் 1) நமோ நாராயணன், ஆறுமுகநேரி ராஜமணியபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகன் 2) முத்துராஜ், ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்த பெருமாள் மகன் 3) பாஸ்கர் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மேற்படி 3 நபர்களை இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தார்.