தூத்துக்குடி நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் 36 வது வார்டு புதிய பூங்காவிற்கு முன்னாள் நகர சபை உறுப்பினர் சித்திரைவேல் பெயரை சூட்ட கோரிக்கை.
தூத்துக்குடி மாநகராட்சி 36 வது தனி வார்டு பகுதி சபா கூட்டம் 01.02. 2024 காலை 10 மணி அளவில் நடைபெற்றது நிகழ்வில் போல்டன்புரம் சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம் பகுதி மக்களுக்கான கழிவு நீர் பிரச்சனைகளை குறித்து எடுத்துக் கூறி சரி செய்யுமாறும் மாசிலாமணிபுரம் மூன்றாவது தெருவில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள பூங்காவிற்கு முன்னாள் நகரசபை உறுப்பினரும், உப்பளத் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களின் பாதுகாவலராக விளங்கியவரும் ஒருங்கிணைந்த நெல்லை தூத்துக்குடி மாவட்ட திமுகவின் வளர்ச்சிக்கு அளப்பரிய கடமையாற்றிய மிசா எஸ்.சித்திரைவேல் பெயரை சூட்ட வேண்டும் என்ற வகையில் அவரது பெயரை சூட்டுவதற்காக தீர்மானத்தில் ஏற்றி விடுமாறு இந்திய குடியரசு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆ.ரத்தினசாமி மற்றும் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் செ. இளவரச பாண்டியன் மற்றும் விழித்தெழு இளைஞர் நலச் சங்கம் தலைவர் பிரதீப் ஜேசுதாஸ் உள்ளிட்ட பலர் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பங்கேற்ற அலுவலர் சுமதி யிடம் மனு அளித்தனர் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட அலுவலர் தீர்மானத்தில் ஏற்றுவதாக கூறினார்.
நிகழ்ச்சியில் 36 வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி, அரசு துறை அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.