விளாத்திகுளம் நீதிமன்றத்தில், களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா: குலவையிட்டு பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்த வழக்கறிஞர்கள்!

விளாத்திகுளம் நீதிமன்றத்தில், களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா: குலவையிட்டு பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்த வழக்கறிஞர்கள்!

தைப்பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில், நீதிபதி, வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என அனைவரும் சேர்ந்து சமத்துவப்பொங்கல் வைத்து, ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்கள் கூறி  உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நிதித்துறை நடுவர் மன்றத்தில் இன்று வழக்கறிஞர்கள் சார்பில், சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் ரங்கோலி கோலமிட்டு, கரும்புகள் மற்றும் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இதில் பாரம்பரிய முறைப்படி புடவை அணிந்து வந்து பெண் வழக்கறிஞர்கள் குலவையிட்டபடி, பொங்கல் பானையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி ஏலக்காய் உள்ளிட்டவற்றை கொங்கு பொங்கல் வைத்தனர். இதைத்தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி பழங்கள் பொங்கல் கரும்பு உள்ளிட்டவற்றை படைத்து தீபாரதனை காட்டி அனைவரும் வழிபட்டனர். பின்னர் விளாத்திகுளம் நீதிபதி ராம் கிஷோர், அரசு வழக்கறிஞர் ரேவதி உட்பட அனைத்து வழக்கறிஞர்கள், காவலர்கள் நீதிமன்றப் பணியாளர்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்கள் கூறி பொங்கல், கரும்பை பரிமாறிக்கொண்டு, செல்போனில் செல்பி எடுத்து உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.