ஈரோடு இடைத்தேர்தலில் தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் வாக்கு சேகரிப்பில் தீவிரம்.

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிழக்குப் பகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் இன்று 25 தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடியவிருக்கும் நிலையில் இன்று ஈரோடு வார்டு எண் 7 பாகம் எண் 9 அக்ரஹாரம் பகுதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் வீடு வீடாகச் சென்று அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர்.
வாக்காளர்கள் சண்முகநாதனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் திருப்பாற்கடல்,தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, 39 வது வார்டு வட்ட செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட சிறுபான்மையணி பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தனராஜ்,மத்திய வடக்கு பகுதி இளைஞரணி செயலாளர் டைகர் சிவா, மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பெருவாரியாக கலந்து கொண்டனர்.