தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பாஜக நடத்திய கருத்தரங்கம் நிகழ்ச்சியில்: 300 பேர் பாஜகவில் இணைந்தனர்

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பாஜக நடத்திய கருத்தரங்கம் நிகழ்ச்சியில்:  300 பேர் பாஜகவில் இணைந்தனர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், பிப்.21:தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவின் பொருளாதார பிரிவு சார்பிலான சிறப்பு கருத்தரங்கம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொருளாதார பிரிவு தலைவர் முத்துக்குமார் ராஜா  தலைமை வகித்தார்,பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர்கள் சந்திரசேகர்,மகாராஜா, சுரேஷ்குமார்,பாலசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருங்குளம் மண்டல் தலைவர் முண்டசாமி வரவேற்புரையாற்றினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளது. மத்திய அரசின் சிறப்புமிகு திட்டங்களால் நமது இந்தியா உலக அரங்கில் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கி வருகிறது.

அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டத்தை தமிழகத்திலேயே பொருளாதாரத்தில் முதன்மை பெற்ற மாவட்டமாக மாற்றிடும் வகையில் அதற்கான வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், விவசாயம் மற்றும் சிறுகுறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்வளங்களும் மேம்படும் வகையிலான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மக்கள் பணியில் பாஜக என்றும் முதன்மையானதாக செயல்படும் என்றார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தை பொருளாதாரத்தில் முதன்மை பெற்ற மாவட்டமாக கொண்டு வரப்படும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொதுசெயலாளர் ராஜா, பொருளாதார பிரிவு மண்டல் தலைவர் நம்பிதுரை,மற்றும் மாவட்ட மண்டல் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கின்போது, வீரபாண்டியபட்டணம் மற்றும் கருங்குளம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 300க்கு மேற்பட்டவர்கள் பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் கால்வாய் முத்துகுமார் ஏற்பாட்டில் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்.

கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொருளாதார பிரிவு தலைவர் முத்துக்குமார் ராஜா  தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.