தூத்துக்குடியில் அண்ணாநகர் பகுதி சார்பில் திமுக இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அண்ணா நகர் பகுதி செயலாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி 3 வது மையில் மெயின் ரோடு சந்திப்பில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டமானது அண்ணா நகர் பகுதி கழக செயலாளர் ரவீந்திரன் தலைமையில் அவைத் தலைவர் நாகராஜன், துணை செயலாளர்கள் திருமலை குமார், பாலகிருஷ்ணன், சந்திரா, பொருளாளர் ஜோதி ராஜ், பிரதிநிதி தயாள சுந்தர், ராஜ்குமார், கருப்பசாமி பாண்டியன், பூல் பாண்டியன், கருப்பசாமி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 34 வது வார்டு வட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமை கழக பேச்சாளர் ஜஸ்டின் வில்மிரட் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்று உரையாற்றினர்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்:
பெண்களுக்கான இலவச பேருந்து வசதி, அரசுப் பள்ளியில் பயின்ற கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் கல்வி உதவித் தொகை ரூபாய் 1000, காலை உணவு திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு வருகை அதிகரித்துள்ளது மாணவர்கள் சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமான முறையில் பயிலுவதற்கு இந்த திட்டம் பெறும் பங்கு வகிக்கிறது. வருகின்ற செப்டம்பர் முதல் அனைத்து பெண்களுக்கும் மாதம்தோறும் ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.மாநகரப் பகுதிகளில் அதிகப்படியான பூங்காக்களை அமைக்கப்பட்டு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் உள்ளத்தில் சோர்வை நீக்கி உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாஜக தமிழக மாநில தலைவர்் அண்ணாமலை நமது கழகத் தலைவர்கள்் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிி வருகிறார் மேலுும் சமூக வலைத்தளங்களில் ஓராண்டுக்கு முன்பு உள்ள பழைய படங்களை பதிவு செய்து பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் நாம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். நாற்பதுக்கு நாற்பதும் வெற்றி பெற வேண்டும் தலைமை கழகத்தால் அறிவிக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக கனிமொழி கருணாநிதி மீண்டும் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பேசினார்.
மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஜஸ்டின் வில்மிரட்;
தூத்துக்குடி மாவட்டம் 10 வது இடத்தில் இருந்த பன்னிரண்டாவது வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தற்போது அமைச்சர் மற்றும் மேயர் முயற்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் 5 வது இடத்தை எட்டியுள்ளது.மாணவர்களுக்கு வழங்க கூடிய சைக்கிள் திட்டத்தின் மூலம் பெற்றோர்கள் காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு இந்த திட்டம் பயன் பெறுகின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தினை அறிவித்தார் நம்முடைய முதல்வர் ஸ்டாலின், நரிக்குறவர்கள் என்று ஏளனம் செய்தவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று உணவு அருந்துகிறார். உணவு சாப்பிட்டு விட்டு முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். உங்கள் உணவு காரம் அதிகமாக இருக்கிறதே என்று கேட்டபோது அந்த பெண் மணி காரம் அதிகமாக இருந்தால் தான் வீரத்தோடு இருக்க முடியும் என்று சொன்னார். உடனே நம் முதல்வர் இன்றிலிருந்து நானும் இனி காரம் அதிகமாக எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினார். இந்த நல்லாட்சி தொடர வேண்டும். நமக்கும் பாஜகவுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.
அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்;
திராவிட மாடல் இரண்டு ஆண்டு ஆட்சியில் அரசு பள்ளியில் பயின்ற கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் மகளிர்க்கு இலவச பேருந்து வசதி ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு மற்றும் விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட் உப்பளத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் நிவாரண தொகையும் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. தற்போது ஒரு லட்சம் பேருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்க முதல்வர் அறிவித்துள்ளார் ஏழரை சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம் நமது பிள்ளைகள் எளிதில் கல்லூரியில் பயல இடம் கிடைக்கிறது திராவிட மாடல் அரசு வந்ததற்கு பின்பாகவே அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறகிறது இது அனைத்தும் திராவிட மாடல் அரசையே சாரும் என்றும் மதத்தை வைத்து மக்களை பிரித்தாள நினைக்கின்றனர் பாஜகவினர் தற்போது கவர்னராக இருக்கும் ஆர் என் ரவி பாஜகவின் பிரதிநிதியாகவே செயல்படுகிறார் எனவும் பேசினார்.
இந்த பொதுக் கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மண்டல தலைவர் அன்ன லெட்சுமி பொதுக்குழுு உறுப்பினர் கோட்டு ராஜா, மாநகர திமுக துணை செயலாளர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி இசக்கி ராஜா, மாவட்ட நெசவாளர் அணி சங்கர நாராயணன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, மாவட்ட அமைப்பாளர் ராமர், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார்( எ)செல்வின், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர நாராயணன், மாவட்ட பிரதிநிதி சுந்தர வேல், அண்ணா நகர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் ஷ் ராமர், ராமகிருஷ்ணன்,சீனிவாசன் ஜான், அதிஷ்ட மணி, சோம சுந்தரி, பொன்னப்பன், கண்ணன், கந்தசாமி, அண்ணா நகர் பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மார்க்கின் ராபர்ட், அண்ணா நகர் பகுதி மாணவரணி அமைப்பாளர் சதீஷ், அண்ணா நகர் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ராமசந்திரன், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அன்பழகன், கழக மாணவரணி கோகுல் நாத், வட்ட செயலாளர்கள் பொன் பெருமாள், மந்திர குமார், பொன்னு சாமி, பத்மாவதி சந்திர மோகன், செந்தில் குமார், பால குருசாமி, சரவணன், சுரேஷ், மற்றும் மருத்துவர் அணி அருண்குமார் தூத்துக்குடி மாநகர அண்ணா நகர் பகுதி கழக நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுக் கூட்ட இறுதியில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஆனந்த சேகர் நன்றியுரையாற்றினார்.