தூத்துக்குடியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற வலியுறுத்தி சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற வலியுறுத்தி சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம்  சார்பில் ஆலோசனை கூட்டம் தேவர் புறம் சாலையில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் 

மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையிலும் நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.

மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்புறையாற்றினார் கூட்டத்தில் கடந்த 6ம் தேதி சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தூத்துக்குடியில் இயங்கி வந்த  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள்  போராட்டத்தை கொச்சைப் படுத்தியும் நீதி மன்றத்தாலும் தமிழக அரசாலும் தடை செய்யப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும் பேசியதையும் தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து தமிழகத்தை விட்டு உடனே ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் வருகின்ற 13.04.2023 வியாழக்கிழமை காலை10மணிக்கு  தூத்துக்குடி BSNL அலுவலகம் முன்பு சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், துணைச் செயலாளர் மில்லை தேவராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ராஜன்,மாநகரச் செயலாளர் உதயசூரியன்,மாநகர அவைத்தலைவர் மதியழகன், செல்வராஜ்,காமராஜ்,நாடார் பேரவை மாவட்ட செயலாளர் டேனியல்ராஜ்,மாவட்ட பொருளாளர் சுப்பையா,உள்பட  பலர் கலந்து கொண்டனர்.