திருச்செந்தூரில் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கக்கோரி கடலில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூரில் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கக்கோரி கடலில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர் அமலிநகரில் அரசு மானிய கோரிக்கையில் ரூபாய் 83 கோடி ஒதுக்கீடு செய்தும் இதுவரை தூண்டில் பாலம் அமைக்காததை கண்டித்து மீனவ மக்கள் 21.2.23 அன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாம் நாள் போராட்டமாக ஊர் மக்கள் அனைவரும் கடற்கரையில் ஒன்றுகூடி மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2500 க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் கலந்துகொண்டனர். காலை 9.30 மணிக்கு துவங்கிய மனித சங்கிலி போராட்டம் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. அமலிநகரில் போலீசார் குவிக்கபட்ட இருந்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு பெண்கள் ஒரு ஆண் என மூவர் வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்தனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.