தூத்துக்குடி மாநகராட்சியில் 1 கோடி ரூபாய் உபரி வருவாயுடன் கூடிய நிதி நிலை அறிக்கையை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் 1 கோடி  ரூபாய் உபரி வருவாயுடன் கூடிய நிதி நிலை அறிக்கையை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில்  இன்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பட்ஜெட் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி  2023-24 ம் ஆண்டின் உத்தேச வரவு செலவு அறிக்கையை வெளியிட்டார்.

தொடர்ந்து பட்ஜெட்  அறிக்கை குறித்து விளக்கினார்.அப்போது இந்த ஆண்டு ஒரு கோடியை 13 லட்ச ரூபாய் உபரியாக வருமானம் வரும்,  குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் 7 கோடி 55 லட்ச ரூபாய் உபரியாக வருமானம் வரும் எனவும், கல்வி நிதியில் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் உபரியாக வருமானம் வரும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நடப்பாண்டில் சொத்து வரி மற்றும் வரியில்லா இடங்கள் மூலமாக 31 கோடியே 64 லட்ச ரூபாய் அரசு சுழல் நிதியாக 6 கோடி 90 லட்சம் அரசு மானியமாக 84 கோடி ரூபாய் மூலமாக 24 கோடி ரூபாய் என மொத்தம் 148 கோடி ரூபாய் வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்

நடப்பு ஆண்டிற்கான சாலை கட்டிடங்கள் இதர பராமரிப்பு செலவினங்களுக்காக 8 கோடியே 15 லட்சம் ரூபாய் இயக்க செலவினங்களுக்காக 47 கோடியை ரூபாய் சம்பளம் ஓய்வூதியம் உள்ளிட்ட செலவுகளுக்காக 67 கோடி ரூபாய் இதர செலவுகளுக்காக 23 கோடியே 78 லட்ச ரூபாய் என மொத்தம் 147 கோடி ரூபாய் செலவாகும் என உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்தார்.

தொடர்ந்து கிரீன் சிட்டியாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் சுற்றுச்சூழல் பேணிக்காக்கப்பட்டு பசுமையான மாநகராட்சியாக மாறும் எனவும் தெரிவித்தார் மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் பல்வேறு சாலைகளை இணைப்பு சாலைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ்,கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார்,மாமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார், ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், வைதேகி, முத்துவேல், பட்சி ராஜ், ராஜதுரை, விஜயகுமார், சுயம்புலிங்கம், பொன்னையன், பேபி ஏஞ்சலின், விஜயலட்சுமி, இசக்கி ராஜா, கந்தசாமி, கீதா முருகேசன்,கனகராஜ்,காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் போஸ்,எடிண்டா, எதிர்க்கட்சி கொறடா அதிமுக மந்திரமூர்த்தி, வீரபாகு, மற்றும்  மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.