தாமிரபரணி ஆற்றங்கரையோர நாணல்காடு கிராமத்தில் கனமழை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை அரசு முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு சண்முகையா எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு வலியுறுத்தினார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர நாணல்காடு கிராமத்தில் கனமழை அதிகமாக பெய்து வரும் நிலையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.
கடந்த ஆண்டு கனமழையின்போது அதிக பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.மேலும் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை அரசு முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா ஜவகர் மண்டல துணை வட்டாட்சியர் பாண்டியராஜன் வருவாய் ஆய்வாளர் மாதவராமன் பணி மேற்பார்வையாளர் சிவகுமார் கருங்குளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி அயலக அணி சஞ்சய் ஊராட்சி மன்ற தலைவர் இசக்கி கிளை செயலாளர் சுடலை ஆகியோர் உடன் இருந்தனர்.