அயிரவன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் உணவு கூடம் - சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் இளவேலங்கால் ஊராட்சி அயிரவன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் உணவு கூடம் அமைக்கும் பணியினை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ்,பங்குத்தந்தை தாமஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி முருகேசன், ஊராட்சி செயலர் ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன், கிளை செயலாளர் முருகன், அரசு ஒப்பந்தகாரர் ஜோசப் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.