தூத்துக்குடி மக்களின் நலன் கருதி 60 வார்டுகளிலும் மாநகராட்சி சார்பில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்- எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி வலியுறுத்தல்.
தூத்துக்குடி மாநகராட்சி 2023-24 பட்ஜெட் தாக்கல் மற்றும் சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.
இந்த மாநகராட்சி கூட்டத்தில்கலந்து கொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினரும் ,மாநகராட்சி அதிமுக எதிர் கட்சி கொறடாவுமான மந்திரமூர்த்தி தூத்துக்குடி மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த புதிய பட்ஜெட்டில் 60 வார்டுகளிலும் இசேவை மையம் அமைத்து தர வேண்டும் எனவும் தூத்துக்குடி நகரில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் பெரும்பாலும் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது அதற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் எனவும், தூத்துக்குடியில் இந்த ஆட்சியில் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது எனவும் இதை கருத்தில் கொண்டு
இந்த புதிய பட்ஜெட்டில் மாநகராட்சி சார்பில் 60 வார்டுகளிலும்சிசிடிவி கேமரா அமைத்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தினார்.