திமுகவின் குடும்ப சொத்தை விற்றால் 50 ஏழை நாடுகளின் கடனை அடைத்து விட முடியும் - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அதிரடி பேச்சு.

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில், என் மண்... என் மக்கள்' என்ற பெயரில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளுக்கும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த பாதயாத்திரை வ.உ.சி சாலை, ரதவீதிகள் வழியாக வ. உ.சி சாலை, கீழசண்முகபுரம் வழியாக நடந்து வந்தார்.
கீழ சண்முகபுரம், ஜார்ஜ் சாலை சந்திக்கும் இடத்தில் கன்னி விநாயகர் ஆலயம் முன்பு நடை பயணத்தை நிறைவு செய்த அவர்... அங்கு திறந்தவேனில் நின்றவாறு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், முத்து குளிக்கும் தூத்துக்குடி மாநகரின் வரலாற்றை எடுத்துக் கூறினார். 1961 ஆம் ஆண்டுக்கு பிறகு முத்துக்குளிக்காமல் இருக்கும் அந்த தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க பாஜக நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த உப்பள தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளித்தால் நாம் இந்தியாவிலேயே உப்பு உற்பத்தியில் முதன்மை இடத்தை பெற முடியும் என்றார். கடந்த 9 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு 7,164 கோடி அளவிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நாகப்பட்டிணம்- தூத்துக்குடி இடையே 338 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை பணிக்காக 1090 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்திற்கு 386 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 620 கோடி ரூபாய்க்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 441 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
துறைமுகம், ரயில், சாலை என அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தூத்துக்குடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் தூத்துக்குடியின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார். மத்திய அரசின் முத்ரா கடனுதவி திட்டத்தில் தமிழகத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது, சாலை வியாபாரிகளுக்கான கடன் மூலமாக ஒரு லட்சத்து 80ஆயிரம் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன என்பது உள்ளிட்ட மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மூலமாக பயன்பற்றி ஒரு பட்டியலை அவர் எடுத்துக் கூறினார்.
தமிழகத்தில் உள்ள மக்களை குடிக்க வைத்து அதன் மூலமாக திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து வருகின்றனர். மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி,முதலவர் மு க ஸ்டாலின், கனிமொழி கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது என கேள்வி எழுப்பிய அவர்... மணல் கொள்ளையை தடுக்க சென்ற அரசு அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். நாட்டிலேயே அதிக அளவில் கடன் வாங்கியதில் இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது 7லட்சத்து53 ஆயிரம் கோடி அளவிற்கு தமிழகம் கடன் வாங்கி உள்ளது. திமுகவினர் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு வருவதால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் எந்த தனியார் தொழில் நிறுவனங்களும் தொழில் தொடங்க வரவில்லை. குறிப்பாக தென் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது இல்லாத நிலையிலே உள்ளது.
முதலமைச்சர் துபாய் சென்று ஆறாயிரத்தி 100 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக சொன்னார் ஆனால் இதுவரை ஆறு ரூபாய் கூட முதலீடு தமிழகத்திற்கு வரவில்லை எனவே இளைஞர்கள் இந்த அரசை தூக்கி எறிய முடிவு செய்ய வேண்டும்.
மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் என்று வாக்குறுதி அளித்தது அந்த வாக்குறுதியின் படி 5 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு இதுவரை வேலை அளித்துள்ளது இன்னும் இருக்கின்ற மாதங்களில் எஞ்சியுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் என்று அவர் உறுதி அளித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அறிவித்தனர் ஆனால் இதுவரை 2000 பேருக்கு கூட வேலை வழங்கவில்லை. தமிழ்நாடு குடிமைப் பணி தேர்வை 13 மாதமாக நடத்த வேண்டிய காரணம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.மத்திய அரசு மீனவர்களை மீனவ விவசாயிகள் என அறிவித்தது மீனவர்களுக்கு ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவிற்கு கிசான் திட்டத்தில் கடன் வழங்கி உள்ளது. மத்திய சம்யுதா யோஜனா திட்டத்தில் 7522 கோடி கடனை வழங்கி உள்ளது.
தமிழக அரசு 2 லட்சம் மீனவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் என்று வாக்குறுதி அளித்தனர்.இதுவரை ஒரு செங்கலை கூட ஒரு மீனவர் குடும்பத்திற்கும் கட்டிக் கொடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்