சட்ட மாமேதை அம்பேத்கரை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சை பேச்சு - சண்முகையா எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்ட மாமேதை அம்பேத்கரை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சை பேச்சு - சண்முகையா எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கரை பற்றி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சை பேச்சை கண்டித்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை மெயின் பஜாரில் வைத்து ஒட்டப்பிடாரம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான சண்முகையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கமிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் அண்ணல் அம்பேத்கரை இழிவு செய்த அமித்ஷாவை கண்டிக்கின்றோம்

பதவி விலகு பதவி விலகு பாவக்காரன் அமித்ஷாவே பதவிவிலகு

பாதுகாப்போம் பாதுகாப்போம் பாதகர்களிடமிருந்து அரசியல் சாசனத்தை பாதுகாப்போம்

மன்னிப்புக்கேள் மன்னிப்புக்கேள் அமித்ஷாவே மன்னிப்புக் கேள்

கொலைகார பாஜகவே உனக்கு அம்பேத்கர் என்றால் இளக்காரமா?

சர்வாதிகாரி அமித்ஷாவே உனக்கு அம்பேத்கர் என்றால் அவமானமா?

எதிர்க்கின்றோம் எதிர்கின்றோம் புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை எதிர்க்கின்றோம் எதிர்கின்றோம்

நிராகரிப்போம் நிராகரிப்போம் பாஜகவை நிராகரிப்போம்

நிராகரிப்போம் நிராகரிப்போம் பாஜகவுடன் கள்ளக்கூட்டணியில் உள்ள அதிமுகவை நிராகரிப்போம் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி சுப்பிரமணியன் இளையராஜா  சரவணகுமார் ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் TTC ராஜேந்திரன் ஒன்றிய கழக துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன் தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ் பகுதி செயலாளர் சிவகுமார் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா இளைஞர் அணி வேல்முருகன் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் மாவட்ட கழக நிர்வாகிகள்,மாவட்ட ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், நகர பகுதி கிளை கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.