பங்களாதேஷ் கலவரத்தில் உயிரிழந்த ஹிந்துக்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டி கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி இந்து முன்னணியினர் பிரார்த்தனை...!

பங்களாதேஷ் கலவரத்தில் உயிரிழந்த ஹிந்துக்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டி கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி இந்து முன்னணியினர் பிரார்த்தனை...!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் வைத்து பங்களாதேஷ் கலவரத்தில் உயிரிழந்த ஹிந்துக்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு மன தைரியமும், மேலும் அவர்களுக்கு நல்ல ஒர் வாழ்க்கை சூழ்நிலையும் ஏற்பட வேண்டியும் இந்து முன்னணி சார்பாக பிரார்த்தனை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொறுப்பாளர் ராகவேந்திரா, கோவில்பட்டி நகர பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் சிபு மற்றும் பொறுப்பாளர்கள் ராஜா, முனீஸ்வரன், மனோகரன், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.