கிழக்கு ஓன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் தலைமையில் மின்னல் வேகத்தில் துவங்கிய நாடாளுமன்ற தேர்தல் பணி : பூத்கமிட்டி, பாக முகவர்கள் திமுகவினர்கள் செம குஷி!!!

கிழக்கு ஓன்றிய திமுக செயலாளர்  சரவணக்குமார் தலைமையில்  மின்னல் வேகத்தில் துவங்கிய நாடாளுமன்ற தேர்தல் பணி :  பூத்கமிட்டி, பாக முகவர்கள் திமுகவினர்கள் செம குஷி!!!

தூத்துக்குடி, மார்ச்,3

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைமையிலான குழு அமைக்கப்பட்டு கூட்டணி கட்சி தலைவர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் தொகுதி குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தி. 3 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் 

 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணியில் மின்னல் வேகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணி துவங்கியது. குறிப்பாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக கிழக்கு ஓன்றிய பகுதியில் பூத்கமிட்டி பாக முகவர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த பூத் கமிட்டி பாக பொறுப்பாளர்கள் கூட்டம் மாப்பிள்ளையூரணி, ஆ.சண்முகபுரம், மாதாநகா், கணேசபுரம், உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். 

 

தொகுதி பொறுப்பாளர் சண்முகையா எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசுகையில் அனைத்து கிளைப்பகுதிகளிலும் பூத்கமிட்டி பாக முகவர்களுடன் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளோம், தூத்துக்குடி மாவட்டத்தில் மற்ற தொகுதியை காட்டிலும் நமது ஓட்டப்பிடாரம் தொகுதியில் கூடுதலான வாக்குகள் பெற்று அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி எம்.பியை வெற்றி பெற செய்வதற்கு இரவு பகல் பாராமல் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்..

மாப்பிள்ளையூரணி கிளைப்பகுதிகளில் உள்ள கிளைச் செயலாளர் உட்பட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு செயல் வீரர் ஒன்றியச் செயலாளராக கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் என  கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் சுட்டிக்காட்டி பேசியதுடன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக் கனியை பறிக்கும் வரை ஒன்றிய செயலாளர் சரவணகுமார் கிளைச் செயலாளர் உட்பட திமுக தொண்டர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்குவார் தாங்களும் அவரிடம் என்ன குறைகள் என்றாலும் தெரிவியுங்கள்அவர் உடனே எனது கவனத்திற்கும்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு உடனே தகவல் கொண்டு வந்து விடுவார் என்று பேசினார். மேலும் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் ஓலிக்க வேண்டும். 2024 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை துண்டு பிரசுரம் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலின்படி அனைவரும் ஓற்றுமையாக பணியாற்றி தமிழகம் புதுச்சோி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான டேவிட்செல்வின், செந்தூர்மணி, டாக்டர் சுதானந்தம், கருங்குளம் யூனியன் ேசர்மன் ராஜேந்திரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மற்றும் தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுகவிற்குட்பட்ட தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா, தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன், ஓன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், வசந்தகுமாாி, பொருளாளர் மாாியப்பன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், தொண்டரணி துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமார், தர்மலிங்கம், சப்பாணிமுத்து, ஊராட்சி மன்ற கிளைச்செயலாளர்கள் காமராஜ், பொன்னுச்சாமி, முருகன், ஆனந்தகுமார், வேல்ராஜ், அம்புரோஸ், இம்மானுவேல், நெல்சன், வடிவேல், ரத்தினகுமார், சேகர், அருள்ஜெகன், பிரபாகர், சரவணன், உத்திரம், ஜான்சன், மூா்த்தி, காசி, ஆனந்தராஜ், இசக்கிமுத்து என்ற செல்வம், மகாராஜா, காஜாமைதீன், பூசாாி முருகன், சந்திரசேகர், துரை, கதிர்வேல், பாண்டி, ஜெபராஜ், குமார், மாாிமுத்து, பாலுநரேன், ஓன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா சக்திவேல், தங்கபாண்டி, ஜேசுராஜா, உமாமகேஸ்வாி, ஓன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனாராஜன், ஓன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மகளிர் அணி ரம்பை, சண்முகத்தாய், மல்லிகா, ஜெயின்னம்பு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிளோமின்ராஜ், முன்னாள் ஓன்றிய துணைச்செயலாளர் மைக்கேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் பாா்த்தசாரதி, கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கும் முன்பே பூத் கமிட்டி, பாக முகவர்களுடன்

ஆலோசனை பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெறுவது கண்டு திமுகவினர் கடும் குஷியில் இருந்து வருகின்றனர். பெரும் மழை காலகட்டத்தில் மாப்பிள்ளை யூரணி கிராமமேபுரட்டி போட்ட காலகட்டத்தில் இரவு பகல் பாராமல் எம்.பி. கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ஆகியோரின் ஆலோசனையின் பேரில் 24 மணி நேரமும் கண் தூங்காமல் பேரிடர் காலகட்டத்தில் மக்களுக்காக உழைத்து இந்த கிராமம் மீண்டும் பழைய நிலைமைக்கு மீண்டு வர பாடுபட்ட பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார்

வருகிற எம் பி தேர்தலில் குறிப்பாக ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி பட்ட பகுதியில் அதிகமான வாக்குகள் எடுத்து எம் பி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்களை தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என சூளுரைத்து மின்னல் வேகத்தில் தற்போது மாப்பிள்ளையூ ரணி பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் பணியை துவக்கி உள்ளார். இது திமுகவினருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது