திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவர் பிரதிஷ்டா தின வருஷாபிஷேகம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவர் பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு வருஷாபிஷேகம் நடைபெறுகின்றது.
அதனை முன்னிட்டு காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபதீபாரானையும் 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகின்றது. காலை 9 மணிக்கு மேல் யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள கும்பகலசங்கள் மேளதாளம் பஞ்சவாத்தியம் முழங்க விமானதளத்தில் உள்ள விமான கலசங்களுக்கு கும்பநீரால் அபிஷேகம் செய்யப்படுகின்றது. வருஷாபிஷேகம் முடிந்தபின்னர் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. இரவில் புஷ்பாஞ்சலி நடைபெறவிருக்கிறது.
இதற்காண ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்