உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் தாருங்கள் என துண்டு பிரசுரம் வழங்கி: மேயர் ஜெகன் பெரியசாமி பிரச்சாரம்.

உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் தாருங்கள் என துண்டு பிரசுரம் வழங்கி: மேயர் ஜெகன் பெரியசாமி பிரச்சாரம்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார்.இவரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்..

இந்நிலையில், இன்று காலை தனசேகரன் நகர் பகுதியில் உள்ள கரிசல் இலக்கிய பூங்கா பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களிடம் உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

அதன்பின், எட்டயபுரம் சாலையில் உள்ள பிரபல தேனீர் கடையில் தேனீர் அருந்திய அவர் அப்பகுதியை சுற்றியுள்ள பொது மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார் தொடர்ந்து ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வணிகர்களிடம் தொடர்ச்சியாக, 4வது ரயில்வே கேட் அருகில் உள்ள வணிக நிறுவனங்களில் வணிகர்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்.

இதில் உடன் மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், வட்ட கழக செயலாளர் ராஜாமணி , மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்வகுமார், முன்னாள் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இசக்கிமுத்து, முன்னாள் வட்ட கழக செயலாளரும் வட்ட கழக பிரதிநிதியுமான மாரியப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி, முன்னாள் வட்ட கழக பிரதிநிதி கண்ணன், முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி போல் பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர் இளைஞரணி வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.