வல்லநாடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் - சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கிராம சபை கூட்டத்தில் போதைபொருட்கள் ஒழிப்பிற்கான உறுதிமொழிகளை சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ரத்னாசங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்தன் முத்துக்குமார் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகப்பிரியா வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணஜோதி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் மலர்விழி வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் தோட்டக்கலை அலுவலர் சிவபெருமாள் வேளாண் வணிகத்துறை மணிகண்டன் மின்வாரிய பொறியாளர் செந்தில்குமார் கால்நடை மருத்துவர் கார்த்திக் உதவி பொறியாளர் தளவாய் தாமிரபரணி வடிநிலக்கோட்ட உதவி பொறியாளர் அஜ்மீர்கான் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் ஜான் செல்வன் கருங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து கருங்குளம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கொம்பையா தகவல் தொழில்நுட்ப அணி சஞ்சய் மாரியப்பன் சின்னத்துரை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.