மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது உச்சநீதி மன்றம் தீர்ப்பு - ஒட்டப்பிடாரத்தில் யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது உச்சநீதி மன்றம் தீர்ப்பு -   ஒட்டப்பிடாரத்தில் யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மசோதாக்களை கிடப்பில் போட்டதாக ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது

அந்த தீர்ப்பில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளது வரையறுக்கப்பட்ட

சட்டப்பேரவையில் நிறைவேற்றும் தீர்மானங்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு தனியாக என்ன அதிகாரம் உள்ளது? சட்டப்பேரவையின் மசோதாக்களை நிராகரிக்க ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் ஏதும் உள்ளதா?

 இரண்டாவது முறையாக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்த மசோதாவை குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம் எனவும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் வெறுமனே உட்கார்ந்திருக்க மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என கூறிய நீதிபதிகள்

 சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாவை அனுப்பிய நாளிலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது

இதை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கீதா ஜீவன் உத்தரவின்படி,மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் வழிகாட்டுதல் படி 50 வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் தலைமையில் 50 வட்ட கழக திமுக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாடப்பட்டது.

"தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்"தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மாநில சுயாட்சி கொள்கையை தொடர்ந்து முழங்கி, உச்ச நீதிமன்றத்தின் 10- மசோதாக்கள் மீதான வழக்கில் சரித்திர வெற்றியைப் பெற்ற  முதலமைச்சர் திமுக தலைவர் மு க.ஸ்டாலின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் கழக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி ஆணைக்கிணங்க  மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பாமரிப்புத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான எம் சி.சண்முகையா வழிகாட்டுதலின்படி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் புதியம்புத்தூர் பேருந்து நிலையத்தில் ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் தலைமையில் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் சிவன்,மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, நெசவாளர் அணி ஈசன் சுரேஷ்,மாணவரணி தங்கதுரை பாண்டியன்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார்,ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன்,ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி,கிளை செயலாளர்கள்பாலகுருசாமி,சற்குணபாண்டியன்,சிவமுருகன்உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.