மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது-உச்சநீதிமன்றம் தீர்ப்பை வரவேற்று 50 வார்டு கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மசோதாக்களை கிடப்பில் போட்டதாக ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது
அந்த தீர்ப்பில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளது வரையறுக்கப்பட்ட
சட்டப்பேரவையில் நிறைவேற்றும் தீர்மானங்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு தனியாக என்ன அதிகாரம் உள்ளது? சட்டப்பேரவையின் மசோதாக்களை நிராகரிக்க ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் ஏதும் உள்ளதா?
இரண்டாவது முறையாக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்த மசோதாவை குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம் எனவும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் வெறுமனே உட்கார்ந்திருக்க மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என கூறிய நீதிபதிகள்
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாவை அனுப்பிய நாளிலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது
இதை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கீதா ஜீவன் உத்தரவின்படி,மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் வழிகாட்டுதல் படி 50 வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் தலைமையில் 50 வட்ட கழக திமுக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வட்டப் பிரதிநிதிகள் செல்வம், ராஜேஷ் லட்சுமணன்,மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன்,பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர்,மாணவரணி யாகவான், விளையாட்டு மேம்பாட்டு அணி சீனிவாச குமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜான் ஸ்டீபன், கலை இலக்கியப் பேரவை சுஜிதா சரவணன்,INTUC நாராயணன்,மாரி செல்வம், ராஜபெருமாள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.