தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் : மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாரம் தோறும் பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை வகித்து, மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர். மேலும் உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளை உரிய நபர்களிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வடக்கு மண்டல அலுவலகத்தின் அருகே உள்ள மக்கள் நல் வாழ்வு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த முகாமில், மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, காந்திமணி, கர்ப்பககனி, மரிய சுதா, சுப்புலட்சுமி, பவானி, நாகேஸ்வரி, அந்தோணி மார்ஷலின், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.