வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அரசாக திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு!.

வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அரசாக திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு!.

தூத்துக்குடி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் எஸ் டி ஆர் விஜயசீரன் 50 வது பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்  அறிமுக கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.இதில் கூட்டணி கட்சியை சேர்ந்த அனைவரும் கலந்து  கொள்கிறோம்.இன்று மாலை நடைபெறும் இந்த  வேட்பாளர் அறிமுக கூட்டம் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டமாக  இருக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.

வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அரசாக திமுக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக வாக்காளர்கள் முழுமையாக நம்புகிறார்கள். 

திமுக ஆட்சிக்கு வந்து 19 மாத காலத்தில் எதிர்மறை ஓட்டு அதிகரித்துக் கொண்டு போகிறது என்றால் அவர்களை  பற்றி அவர்களின் குறைகளை பற்றி பேச ஒரு பட்டியலே தேவைபடுகிறது அதுவே வேற்றிக்கு அடிதளமாக அமையும் என்ற அவர் 

டெல்டா பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளாமல் விவசாயிகளை காப்பாற்ற இந்த அரசு தவறிவிட்டது.

டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க  வேண்டும்.இந்த அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாக செயல்படுகிறது என குற்றம்சாட்டிய அவர் வருங்கால நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு எங்களது கூட்டணியின் வியுகம் வெற்றி வியுகமாக அமையும்  என்றார்.