கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

தூத்துக்குடியில், டிசம்பர் 2023ல் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு; விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் கானல் நீர்; மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரத போரட்டத்தை அறிவித்திருக்கும் நிலையில், உடனடியாக மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை...!
இதுகுறித்து தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.
கடந்த டிசம்பர் 2023ல் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய ஸ்ரீவைகுண்டம்,ஏரல், குரும்பூர், ஆழ்வார் திருநகரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் முற்றிலும் அழிந்து விளைநிலங்கள் முழுவதும் மணல்கள் மற்றும் கற்களால் சூழப்பட்டு வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பொருளாதார ரீதியிலான பாதிப்பில் இருந்து கொண்டுவர முடியாமல் தவித்து வருகின்றனர்.. இந்த ஆண்டாவது விடிவுகாலம் பிறக்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் விவசாய நிலங்களில் படிந்த Lமணல்கள் மற்றும் கற்கள் இன்னும் அகற்றப்படாமலே உள்ளது..
மேலும், ஸ்ரீவைகுண்டம் கஸ்பாகுளம், தென்கரைகுளம், கடம்பாகுளம், வெள்ளுர்குளம், போன்ற குளங்கள் உடைந்து அவற்றின் கரைகள் தற்காலிகமாக மணல்களை கொண்டு சீரமமைக்கப்ட்டுள்ளது. இவ்வாறு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் கஸ்பாகுளம் உள்ளிட்ட குளங்களில் மணல்களால் அமைக்கப்பட்ட கரை என்பதால் ஆங்காங்கே நீர்கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.. மேலும் இங்குளங்களில் இருந்து பாசனத்திற்கான செல்லும் கால்வாய்கள் மிகவும் சேதமடைந்து உள்ள நிலையில் இன்னும் சீரமைக்கப்படாமலே உள்ளது.மழைகாலம் துவங்க சில மாதங்கள் உள்ள நிலையில் விளைநிலங்களில் படிந்துள்ள மணல்கள் மற்றும் கற்கள் அகற்றிடவும், பாசனத்திற்கான கால்வாய்களை தூர்வாரவும் மற்றும் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட குளக்கரைகளை நிரந்தரமாக சீரமைக்கவும் கோரி விவசாய பெருமக்கள் வருவாய் அலுவலகத்தில் மனு அளித்த நிலையில் பொதுப்பணித்துறையை நாட அறிவுறுத்தப்பட்டனர்.பொதுபணித்துறையினரை சந்தித்த போது விவசாய அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒவ்வொறு துறையிலும் முறையிட்டும் எந்த தீர்வும் கிடைக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில்
மனு அளித்துள்ளனர். அப்படியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தற்போது வருகின்ற 16.09.2024 அன்று உண்ணாவிரத போரட்டம் நடத்த உள்ளதாக தென்கரைகுளம் பகுதியைசார்ந்த விவசாயிகள் அறிவித்துள்ளனர்.எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாய பெருங்குடி மக்கள் சந்தித்து வரும் துன்பங்களை கருத்தில்கொண்டு மேற்குறிப்பிட்ட பகுதிகளை நேரடியாக ஆய்வுசெய்து விவசாய நிலங்களில் படிந்துள்ள மணல்களை விரைந்து அகற்றவும் சேதமடைந்துள்ள பாசனக் கால்வாய்களை தூர்வாரவும மேற்குறிப்பிட்ட குளக்கரைகளை நிரந்தரமா சீரமைக்க நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு முடிவு எடுக்க வேண்டும் என்றார்.