சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 266 வது பிறந்த நாள் விழா - அமைச்சர் கீதா ஜீவன் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 266 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன்,சரவணகுமார் ராஜேந்திரன்,வைதேகி, வட்டச் செயலாளர், சுப்பையா, மூக்கையா, சுரேஷ் குமார்,சிங்கராஜ், செல்வராஜ், நவநீதகிருஷ்ணன், வட்ட பிரதிநிதிகள் ரவி,குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.