ஒட்டப்பிடாரம் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு வழங்கினார்.

ஒட்டப்பிடாரம் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா -   ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு வழங்கினார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஒட்டப்பிடாரம் வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்சண்முகையா 33 மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.

 

இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி வட்டார கல்வி அலுவலர்கள் பவனந்தீஸ்வரன் மகாலட்சுமி பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் உதவி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு நகர செயலாளர் பச்சைப்பெருமாள் கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் முறம்பன் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சுடலைமணி ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.