புல்வாமா தாக்குதல் உயிரிழந்த வீரர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம்; எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்

புல்வாமா தாக்குதல் உயிரிழந்த வீரர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம்; எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்

புல்வாமா தாக்குதல் 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்தது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சிஆா்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.

உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எட்டயபுரம் அருகே உள்ள இராமனூத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராஹிம் தலைமையில் எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னா் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து  பேரணியாக பள்ளி மாணவ மாணவியிா்கள் மௌன அஞ்சலி ஊர்வலம் சென்றனர் .

இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை இந்திரா, தன்னார்வலர் ஐயப்பன்,கிளைச் செயலாளர் காளியப்பன் உட்பட பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.