தூத்துக்குடி முத்தாரம்மன் கோயில் கொடை விழா - திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் நாளை 4000 பேருக்கு அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் துவக்கி வைக்கிறார்.
துாத்துக்குடி ,மே 15 - துாத்துக்குடி முத்தாரம்மன் கோயில் கொடை நாளை நடைபெறுகிறது அதனை முன்னிட்டு அதிமுக 39 வது வார்டு வட்டச் செயலாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 4000 பேருக்கு அன்னதானம் நடக்கிறது .
இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் தெற்குமாவட்ட செயலாளர் சண்முகநாதன் துவக்கி வைக்கிறார் .டி.ஏ தெய் வநாயகம் , அவை தலைவர் திருப்பாற்கடல் அ.தி.மு.க. அமைப்புசெயலாளர் சின்னத்துரை , முன்னாள் மத்திய கூட்டுறவு பாங்க் தலைவர் சுதா கர் , மாவட்ட தலைவர் , இலக்கிய அணி செயலாளர் நடராஜன் , மத்திய வடக்கு பகுதி இளைஞரணி துணை செயலாளர் டைகர் சிவா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர் .
துாத்துக்குடி வடக்கு ரதவீதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் திருவிழா இன்றுதுவங்கி வரும் 23 ஆம் தேதிவரை நடக்கிறது . விழாவை ஒட்டி ஒவ் வொரு நாளும் அம்ம னுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.இன்று இரவு மாகாப்பு தீபாராதனை நடக்கிறது . நாளை ( 16 ஆம் தேதி ) காலையில் கும்ப பூஜை , பால்குடம் எடுத்தல் , அபிஷேகம் , மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனைகள் , கஞ்சி வார்த்தல் , மாலையில் மாவிளக்கு பூஜை , பொங்கல் இடுதல் , இரவு 12 மணிக்கு படைப்பு தீபா ராதனைகள் நடக்கிறது .
திருவிழாவை ஒட்டி 11 நாளை காலை மணிக்கு அதிமுக . 39 வது வட்டச் செயலாளரும் மத்திய வடக்குபகுதி எம்.ஜி.ஆர் . , இளைஞர் அணி செயலாளருமான திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் அன்னதானம் நடக்கிறது.
வரும் 17 ஆம் தேதி மாலை 6மணிக்கு அம்மன் பித்தளை சப்பரத்தில் வீதி உலா வருதல் , மணிக்கு பச்சை சாத்தி வலம் வருதல் , கோயிலில் அம்மன் பக் தர்களுக்கு காட்சி தருத லும் நடக்கிறது . இரவு வரும் 18 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது . வரும் 23 ஆம் தேதி இரவு பைரவர் பூஜை யுடன் முத்தாரம்மன் கோயில் கொடை விழா நிறைவடைகிறது .