கள்ள சாராயம் விற்பனையை தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேர் பலியானார். மேலும் ஏராளமான சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து இன்று தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல் தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜ் தலைமையில் வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N. K. P. பெருமாள், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ் , விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து, எட்டயபுரம் அவைத்தலைவர் கணபதி, வார்டு கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி,மாநகராட்சி அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள், மண்டல செயலாளர்கள் முருகன், பொன்ராஜ் உட்பட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்தும் முதல்வர் ஸ்டாலின் உடனே பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.