ஈரோடு இடைத்தேர்தலில் தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தீவிர பிரச்சாரம்.

ஈரோடு இடைத்தேர்தலில் தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தீவிர பிரச்சாரம்.

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி 27 ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் இன்று 25 தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடியவிருக்கும் நிலையில் இன்று ஈரோடு வார்டு எண் 7 பாகம் எண் 9 அக்ரஹாரம் பகுதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் 51 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சி கொரடாவுமான மந்திர மூர்த்தி,வீடு வீடாகச் சென்று அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில்  தீவிரமாக ஈடுபட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும், 39 வட்ட கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம்,மேற்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், 35 வது வட்டக்கழக செயலாளருமான மணிகண்டண், தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர்அணி இணைச்செயலாளர் டைகர் சிவா, மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.