முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பிறந்தநாள்; திருச்சிற்றம்பலம் மற்றும் டைகர் சிவா பிரம்மாண்ட சாக்லேட் மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து!.
தூத்துக்குடி இன்று 09/09/23 பிறந்தநாள் காணும் முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பி சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி 39 வது வார்டு வட்ட கழக செயலாளர் திருச்சிற்றம்பலம் மற்றும் மத்திய வடக்கு பகுதி கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் டைகர் சிவா ஆகியோர் ஏற்பாட்டில் பிரம்மாண்ட ஆள் உயர சாக்லேட் மாலை அணிவித்து வாழ்த்துக் கூறிய ஆசி பெற்றனர்.
இந்த சாக்லேட் மாலை தூத்துக்குடி பகுதியில் இதுவரையிலும் யாரும் பார்த்ததில்லை இதுவே முதல் முறை என அனைவரின் கவனத்தையும் இந்த சாக்லேட் மாலை ஈர்த்தது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், செக்காரக்குடி ஒன்றிய செயலாளர் கருங்குளம் யூனியன் துணை சேர்மன் லட்சுமண பெருமாள் தொழில் அதிபர்கள் அருணா பைனான்ஸ் பழனி குமார் திலகர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தார்.